2.06.2009

என்னை போல் ஆயிரம்....

கனவிலும் அமைதி இல்லை
நண்பனின் குறட்டை

உண்ணும் போது புறை ஏறியும்
தட்ட வில்லை
நினைப்பது அவள்

பேருந்திலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை
சில்லறை பாக்கி

பதில் சொல்ல முடியவில்லை
காதலியின் சந்தேகம்

நாள்ளெல்லாம் உழைக்கிறேன்
வியர்வை இல்லை
அனலாக கணிபொறி

நிம்மதியை கோவிலில் தேட
அங்கும்
ஆயிரத்தில் ஒரவன் நான்....

அழியாத அன்புடன்
மனோஜ்


2.04.2009

இயல்பு...

கார்த்திகை நோன்பு, ஒருபொழுது
முனுமுனுக்கும் பக்தி பாடல்
சூரிய நமஸ்காரம்
காக்கைக்கு அன்னம்
துளசி துருவம் படையல் முடித்து..

பின் மேடையில், இறைவனை வணங்கி
கருப்பு குடுவையில் எனக்காக
பேச இருந்த தலைப்பு
"கடவுள் இல்லை"...


அழியாத அன்புடன்
மனோஜ்

1.28.2009

...பிரிவு...


பிரிவு..
குடை கம்பியில் சொட்டும் துளியெய் எண்ணினேன்
மழை நிற்கும் வரை

உன் வருகையை எதிர்நோக்க
கண்களின் உதவியெய் அவ்வபோது நாடுகிறது என் மனம்

என்னோடு வந்த மழைக்கும் மேகத்திற்கும் கூட
வானவில்லே வளைந்து காட்சி தந்து விட்டது

என் கைக்குட்டைக்கு தெரியவில்லை
மழை நீர், கண்ணீர் என்ற வித்யாசம்

அது முழுதாக நனையும் வரை
தான் கண்களுக்கும் ஆறுதல்

உன் தாவணி முனையில் உன்னை காதலித்தேன்
சேலைக்கு மாறிவிட்டாய், மறுமணமா உனக்கு?

அழியாத அன்புடன்
மனோஜ்


1.25.2009

என் வீட்டு தேநீர் கோப்பையில் எத்தனை எச்சில் - முதிர்கன்னி

12.06.2008

காதலியே...

- காதலியே...

நீயே கொன்றாலும் சாகவேண்டும் உன் மடியில்....

9.17.2008

காதலை எண்ணுகுறேன் ....

காதலை எண்ணுகுறேன் ....

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒயாரோ ?
உன் காதலில் வாழ்வது யாரோ ?உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ!?

ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா?இலையை போல் என் இதயம் தவறி விழுது.

-- யாரோ :)

7.11.2008

வாழ்த்து..

வாழ்த்து..

புன்னகையுடன் மலர்ந்த கண்கள் கண்டது
அந்த காலை மலர்ச்சியை,
வாய்வழியாக உன் சிரிப்பாலும்,
சப்தத்தை செவிகளும் உணர்ந்த வேளையில்
அந்த உன்னதமான மௌனத்தை உன் மனதும் அறியும்,

இந்நாளில் ஏன் இந்த மாற்றம்,

வருடம் முழுவதும்
வாழ்த்துக்களை வாழ வைக்க வந்தவார்த்தைகளை வாரிக்கொள் வாழ்வென்கிலும் இரைதிரிக்கிறோம் உனக்காக !!

உறவுகள் சூழட்டும்,
புன்னகை ஆளட்டும்,

மனதில் மத்தாப்பு பொறிக்கட்டும்
சிரிப்பிலே உன் வாழ்வு உன்னிடம்
சிறை கொள்ளட்டும்...

வாழ்க வளமுடன் ...


அழியாத அன்புடன்,
மனோஜ்.....