காதல் க(வ)லை....
ஆசைகள் ஆக்கிரமிப்பு, ஆனாலும் மனதில்
ஆங்காங்கே ஆதிக்கம், செல்ல கோபங்கள்
சேர்த்து வைத்த காதலை செலவழிக்க மாட்டாய்
கண்களில் கண்ணீரை சேமிக்கவும் மாட்டாய்
நிரந்தரமில்லா நிழல்களிடத்தில் என்னையும்,
உன் காதலையும் விட்டு விட்டு,
நினைவுகள் மட்டும் நிரந்தரமாய் தருகிராய்
.....
நீ சுடுவதால் தானே நான் நெருப்பாகிறேன்
பார்வைகளுக்கும் இதில் பங்கு உண்டு
பொய்களாவது பேசட்டும் உன் வாய் புன்னகை வழியாக
கைகள் விரல்களை எண்ணிக்கொண்டு நேரத்தை விலை பேசுகிறது,
வார்த்தைகளால் உன்னை வாரிக்கொள்கிறேன்
வா அன்பே, காதலில் கவலையை கலைத்துவிடுவோம்..
-- மனோஜ் --
12.11.2006
4.10.2006
3.24.2006
3.22.2006
3.17.2006
3.16.2006
3.13.2006
3.10.2006
2.06.2006
2.02.2006
Subscribe to:
Posts (Atom)