2.06.2009

என்னை போல் ஆயிரம்....

கனவிலும் அமைதி இல்லை
நண்பனின் குறட்டை

உண்ணும் போது புறை ஏறியும்
தட்ட வில்லை
நினைப்பது அவள்

பேருந்திலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை
சில்லறை பாக்கி

பதில் சொல்ல முடியவில்லை
காதலியின் சந்தேகம்

நாள்ளெல்லாம் உழைக்கிறேன்
வியர்வை இல்லை
அனலாக கணிபொறி

நிம்மதியை கோவிலில் தேட
அங்கும்
ஆயிரத்தில் ஒரவன் நான்....

அழியாத அன்புடன்
மனோஜ்


2.04.2009

இயல்பு...

கார்த்திகை நோன்பு, ஒருபொழுது
முனுமுனுக்கும் பக்தி பாடல்
சூரிய நமஸ்காரம்
காக்கைக்கு அன்னம்
துளசி துருவம் படையல் முடித்து..

பின் மேடையில், இறைவனை வணங்கி
கருப்பு குடுவையில் எனக்காக
பேச இருந்த தலைப்பு
"கடவுள் இல்லை"...


அழியாத அன்புடன்
மனோஜ்

1.28.2009

...பிரிவு...


பிரிவு..
குடை கம்பியில் சொட்டும் துளியெய் எண்ணினேன்
மழை நிற்கும் வரை

உன் வருகையை எதிர்நோக்க
கண்களின் உதவியெய் அவ்வபோது நாடுகிறது என் மனம்

என்னோடு வந்த மழைக்கும் மேகத்திற்கும் கூட
வானவில்லே வளைந்து காட்சி தந்து விட்டது

என் கைக்குட்டைக்கு தெரியவில்லை
மழை நீர், கண்ணீர் என்ற வித்யாசம்

அது முழுதாக நனையும் வரை
தான் கண்களுக்கும் ஆறுதல்

உன் தாவணி முனையில் உன்னை காதலித்தேன்
சேலைக்கு மாறிவிட்டாய், மறுமணமா உனக்கு?

அழியாத அன்புடன்
மனோஜ்


1.25.2009

என் வீட்டு தேநீர் கோப்பையில் எத்தனை எச்சில் - முதிர்கன்னி