இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
பிச்சைகாரனை விரட்டிவிட்டு,
அறம் செய்ய விரும்பு என்று பிள்ளைக்கு பாடம்!
வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தாலும்
மின்சாரம் இல்லை!
புண்ணியஸ்தலம் பல இருப்பின்
பாவத்திற்கு குறை இல்லை
கோவிலுக்குள் பூசாரி!
உள்நாட்டில் குண்டு வெடிப்புகள்
உச்சிமாநாட்டில் உலக சமாதான கையொப்பம்!!
மழை நின்றும் துவானம் விடவில்லை
ஈழத்திற்கு பிறகு பலரின் பேச்சு!
அந்நிய மண்ணில் அவன் வேலையில் நான்
அந்த வகையில் நானும் ஒரு சந்தர்ப்பவாதி!!!
அழியாத அன்புடன்
மனோஜ்.
7.21.2010
இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
Subscribe to:
Posts (Atom)