6.26.2008

அந்நிய ப(ய)ணம்

அந்நிய ப(ய)ணம்.... (1)


நாள் ஒரு பொழுதில் உன்னை நீ நாடு கடத்திக்கொள்
பணிக்காக ப(ய)ணம் செய்
என்ற அழைப்பும் பொறுப்பும் சேர்ந்தே வந்தது.
வாழ்கையில் ஒன்றும் தனித்து வருவதில்லை
இன்பமும் சரி துன்பமும் சரி.


பிறந்த மண்ணையும், மக்களையும் காண முடியவில்லை
நேரமின்மை,
இவர் தான் என் பசியின்மை, துக்கமின்மைக்கு காரண கர்த்தா.
சொந்த பந்தங்கள், நண்பர்கள், வீடு, வாசல் போன்ற பலவனக்கு
என் வார்த்தைகளை மட்டும் வீசிவிட்டு
நினைவுகளை எல்லாம் சுமந்து கொள்ள தயாரானேன்...

(தொடரும்...)

புரிதலும் பிரிதலும்..

புரிதலும் பிரிதலும்..

அன்பை ஆடம்பரமாய் செலவழித்தேன்,

அதை வறுமையின் வாசலில் விற்றுவிட்டாய்,

வருடங்களை வருடிய நம் பழக்கம் - புரிதலுக்கு காரணம்,

உன் வார்த்தைகலளிலும் உள்ளது நா பழக்கம் - பிரிதலுக்கு காரணம்.