அந்நிய ப(ய)ணம்..... (2)
கடைசி நேர படபடப்பு, நண்பர்களின் அன்பளிப்பு
பார்வையை மறைத்த கண்ணீர், கனவுகள்,
நினைவுகள் என எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன்
என்னோட துணி மணிகளோடு.
நிலவும் நட்சத்திரமும் ஒன்று கூடி
என்னை வாழ்த்தி வழியனுப்ப,
வீதியெங்கும் தெரு விளக்குகள்
இருட்டை அலங்கரிக்க, ஏனோ
சூரியனுக்கு வர மனமில்லை போலும்.
அந்த இரவு பொழுது பொழிந்தது மெல்லிய தூறல்,
மண் மணம் பரப்பிய வண்ணம்
இட்டது எனக்கு தண்டோரா,
சூரியன் எனக்காக காத்திருக்கிறான் அங்கு என்று.
அந்த கடைசி சில நிமிடங்கள்... தாயோடும் மண்ணோடும்,
(தொடரும்..)
7.02.2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment