10.07.2010

நிகழ்வுகள்...மாற்றங்கள்...

நிகழ்வுகள்...மாற்றங்கள்...

நீ பேசாத தருணங்கள், உன் கண்களும் ஊமைகள்.

வாய் விட்டு அழுவதற்கு, உதடுகள் கூட உதவ மறுக்கிறது.

தீக்குச்சி போல் மனம் உரசி உரசி எரிகிறது,
அவ்வப்போது உன் நினைவுகள் அதனை அணைக்கிறது.

கண்கள் அணை திறக்கிறது, கண்ணீர் பெருக்கில் புன்னகை அடித்து செல்ல படுகிறது.

அனால் என் கைகள் செய்ததென்னவோ,
இந்த கருப்பு காகிதத்தை கிழித்தது தான்.

அதனால் தோழியே....

விழி நீர் துடைக்க உன் கரங்கள் நீட்டு
பல்வரிசை வழியாக புன்னகை செய்
கிழிந்த மனதை தைக்க உன் கூந்தல் கொடு
கைகளை பிடித்து என் கற்பனைகளுக்கு முத்தமிடு
கவலைகளுக்கு இனி என்றுமே விடுமுறை தான்.


அழியாத அன்புடன்
மனோஜ்.

No comments: