11.07.2010

வாழ்த்தும் நெஞ்சம்...

வாழ்த்தும் நெஞ்சம்...

உன்னோடு நான் செலவிடும் நேரங்கள்
வண்ணங்களை பூசிக் கொள்கிறது
என் வாழ்க்கைச் சிறகுகள்...

என் தாய்மையை படைத்தை கடவுள்,
நீ தோன்றிய இந்நாள் தான்
என்னுலகிற்கும் பிறந்த நாள்..

நீ
என் இரண்டாம் துடிப்பு
என் கண்களை அவ்வபோது அலங்கரிக்கும் காட்சி..

இதோ உன் பிறந்தநாள் பரிசளிக்க
என் இதழ்கள் தொடங்கிவிட்டது

உனக்கு பரிசளிக்க என்னை தவிர என்னிடம்
எதுவுமே இல்லை
அத்தனையும் தாரை வார்த்து விட்டேன்
நீ வந்த நாளிலே...

அன்புடன்
உன்னவள்

No comments: