வாழ்த்து..
புன்னகையுடன் மலர்ந்த கண்கள் கண்டது
அந்த காலை மலர்ச்சியை,
வாய்வழியாக உன் சிரிப்பாலும்,
சப்தத்தை செவிகளும் உணர்ந்த வேளையில்
அந்த உன்னதமான மௌனத்தை உன் மனதும் அறியும்,
இந்நாளில் ஏன் இந்த மாற்றம்,
வருடம் முழுவதும்
வாழ்த்துக்களை வாழ வைக்க வந்தவார்த்தைகளை வாரிக்கொள் வாழ்வென்கிலும் இரைதிரிக்கிறோம் உனக்காக !!
உறவுகள் சூழட்டும்,
புன்னகை ஆளட்டும்,
மனதில் மத்தாப்பு பொறிக்கட்டும்
சிரிப்பிலே உன் வாழ்வு உன்னிடம்
சிறை கொள்ளட்டும்...
வாழ்க வளமுடன் ...
அழியாத அன்புடன்,
மனோஜ்.....
7.11.2008
7.02.2008
அந்நிய ப(ய)ணம்
அந்நிய ப(ய)ணம்..... (2)
கடைசி நேர படபடப்பு, நண்பர்களின் அன்பளிப்பு
பார்வையை மறைத்த கண்ணீர், கனவுகள்,
நினைவுகள் என எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன்
என்னோட துணி மணிகளோடு.
நிலவும் நட்சத்திரமும் ஒன்று கூடி
என்னை வாழ்த்தி வழியனுப்ப,
வீதியெங்கும் தெரு விளக்குகள்
இருட்டை அலங்கரிக்க, ஏனோ
சூரியனுக்கு வர மனமில்லை போலும்.
அந்த இரவு பொழுது பொழிந்தது மெல்லிய தூறல்,
மண் மணம் பரப்பிய வண்ணம்
இட்டது எனக்கு தண்டோரா,
சூரியன் எனக்காக காத்திருக்கிறான் அங்கு என்று.
அந்த கடைசி சில நிமிடங்கள்... தாயோடும் மண்ணோடும்,
(தொடரும்..)
கடைசி நேர படபடப்பு, நண்பர்களின் அன்பளிப்பு
பார்வையை மறைத்த கண்ணீர், கனவுகள்,
நினைவுகள் என எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன்
என்னோட துணி மணிகளோடு.
நிலவும் நட்சத்திரமும் ஒன்று கூடி
என்னை வாழ்த்தி வழியனுப்ப,
வீதியெங்கும் தெரு விளக்குகள்
இருட்டை அலங்கரிக்க, ஏனோ
சூரியனுக்கு வர மனமில்லை போலும்.
அந்த இரவு பொழுது பொழிந்தது மெல்லிய தூறல்,
மண் மணம் பரப்பிய வண்ணம்
இட்டது எனக்கு தண்டோரா,
சூரியன் எனக்காக காத்திருக்கிறான் அங்கு என்று.
அந்த கடைசி சில நிமிடங்கள்... தாயோடும் மண்ணோடும்,
(தொடரும்..)
Subscribe to:
Posts (Atom)