11.07.2010
வாழ்த்தும் நெஞ்சம்...
உன்னோடு நான் செலவிடும் நேரங்கள்
வண்ணங்களை பூசிக் கொள்கிறது
என் வாழ்க்கைச் சிறகுகள்...
என் தாய்மையை படைத்தை கடவுள்,
நீ தோன்றிய இந்நாள் தான்
என்னுலகிற்கும் பிறந்த நாள்..
நீ
என் இரண்டாம் துடிப்பு
என் கண்களை அவ்வபோது அலங்கரிக்கும் காட்சி..
இதோ உன் பிறந்தநாள் பரிசளிக்க
என் இதழ்கள் தொடங்கிவிட்டது
உனக்கு பரிசளிக்க என்னை தவிர என்னிடம்
எதுவுமே இல்லை
அத்தனையும் தாரை வார்த்து விட்டேன்
நீ வந்த நாளிலே...
அன்புடன்
உன்னவள்
10.07.2010
நிகழ்வுகள்...மாற்றங்கள்...
நீ பேசாத தருணங்கள், உன் கண்களும் ஊமைகள்.
வாய் விட்டு அழுவதற்கு, உதடுகள் கூட உதவ மறுக்கிறது.
தீக்குச்சி போல் மனம் உரசி உரசி எரிகிறது,
அவ்வப்போது உன் நினைவுகள் அதனை அணைக்கிறது.
கண்கள் அணை திறக்கிறது, கண்ணீர் பெருக்கில் புன்னகை அடித்து செல்ல படுகிறது.
அனால் என் கைகள் செய்ததென்னவோ,
இந்த கருப்பு காகிதத்தை கிழித்தது தான்.
அதனால் தோழியே....
விழி நீர் துடைக்க உன் கரங்கள் நீட்டு
பல்வரிசை வழியாக புன்னகை செய்
கிழிந்த மனதை தைக்க உன் கூந்தல் கொடு
கைகளை பிடித்து என் கற்பனைகளுக்கு முத்தமிடு
கவலைகளுக்கு இனி என்றுமே விடுமுறை தான்.
அழியாத அன்புடன்
மனோஜ்.
8.15.2010
என்ன தான் செய்வது....
மனம் உண்ண மறுத்து பசியெய் போக்கிறது...
இமை மூட மறுத்து கனவினை கலைக்கிறது....
வெளிச்சம் வந்து இரவினை எழுப்பும்வேளையும் வந்தது...
நான் வாய் திறந்து நீ கேட்கும் மொழி பேச வைக்கிறது....
உன் எதிர்பர்புக்கள் பின்னிய கயிற்றில்என் சிந்தனைகளை எழுகிறது....
கண்களில் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்து உன் கைகள் சொன்னது இக்கணம் நட்பிற்கு இலக்கணம்....
அழியாத அன்புடன்
மனோஜ்
7.21.2010
இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
பிச்சைகாரனை விரட்டிவிட்டு,
அறம் செய்ய விரும்பு என்று பிள்ளைக்கு பாடம்!
வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தாலும்
மின்சாரம் இல்லை!
புண்ணியஸ்தலம் பல இருப்பின்
பாவத்திற்கு குறை இல்லை
கோவிலுக்குள் பூசாரி!
உள்நாட்டில் குண்டு வெடிப்புகள்
உச்சிமாநாட்டில் உலக சமாதான கையொப்பம்!!
மழை நின்றும் துவானம் விடவில்லை
ஈழத்திற்கு பிறகு பலரின் பேச்சு!
அந்நிய மண்ணில் அவன் வேலையில் நான்
அந்த வகையில் நானும் ஒரு சந்தர்ப்பவாதி!!!
அழியாத அன்புடன்
மனோஜ்.